அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது! தமிழக அரசுக்கு நாலாபுரமும் குடைச்சல் கொடுக்கும் பாஜக!

0
91

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக அமர்ந்து திமுகவிற்கு கொடுத்த குடைச்சலை விட பாஜக அதிக அளவில் திமுக அதற்கு குடைச்சலை கொடுத்து வருகிறது.

அதற்கு காரணம் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை மூலமாக ஆளுங்கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக சோதனை நடத்தி அதிமுகவிற்கு அச்சுறுத்தல் வழங்கி அதன் மூலமாக அதிமுகவை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது தமிழக அரசு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் பாஜகவை பொருத்தவரையில் திமுக அரசால் அந்த கட்சியை இதுவரையில் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆகவே பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று யோசித்த தமிழக அரசு ஒரு அதிரடி திட்டத்தை வகுத்தது. அதுதான் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ண குமாரின் கைது.
அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரகசிய திட்டங்களை அறிந்து கொள்வதற்காகத்தான் அவருடைய உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகனை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக தானாக பாஜகவின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு திமுகவை எதிர்த்து அவர் தீவிர அரசியல் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறார்.

இதற்கு முன்பாக தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்தவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் விவகாரத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனை அறிந்து கொண்ட அந்த கட்சியின் தேசிய தலைவர்கள் தொடர்ந்து அண்ணாமலைக்கு உற்சாகத்தை வழங்கி வருகிறார்கள்.

அண்ணாமலையின் உதவியாளரான கிருஷ்ணகுமார் முருகன் அவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. ஆகவே அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற காரணத்திற்காகவே அவர் மீது இப்படி ஒரு வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கிருஷ்ணகுமார் முருகன் தான் அண்ணாமலையிடம் நாள்தோறும் திமுக அரசுக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வழங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழக காவல்துறையினர் மூலமாக கிருஷ்ணகுமார் மீது கை வைத்துள்ளது தமிழக அரசு அவர் சேகரித்து வழங்கும் புள்ளி விவரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் அண்ணாமலை தமிழக அரசையும், திமுகவையும் விமர்சனம் செய்து வருகிறார்.

ஆனால் அவர் செய்யும் விமர்சனங்களுக்கும், வெளியிடும் குற்றச்சாட்டுகளுக்கும் தமிழக அரசு சார்பாகவோ, அல்லது திமுக சார்பாகவும் எந்த விதமான விளக்கமும் இதுவரையில் அளிக்கப்படவில்லை.

அதற்குக் காரணம் திமுக பாஜகவை அலட்சியப்படுத்துகிறதா என்று யோசித்தால் பாஜகவை அலட்சியப்படுத்த வில்லை. பாஜக தலைமை வெளியிடும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவிடம் பதிலில்லை என்றே சொல்லப்படுகிறது.

ஆகவே தான் நாள்தோறும் திமுகவிற்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து வழங்கும் கிருஷ்ணகுமாரை கைது செய்து விட்டால் அண்ணாமலைக்கு எந்த விதமான புள்ளிவிபரங்களும் கிடைக்காமல் அவர் தடுமாறி போவார் திமுகவையும், தமிழக அரசையும் எதிர்த்து விமர்சனம் செய்வதை குறைத்துக் கொள்வார் என்று அதிகாரிகள் சிலர் யோசனை வழங்கியதாக தெரிகிறது.

அதோடு கிருஷ்ணகுமாரை கைது செய்து அவர் மூலமாக அண்ணாமலையின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் எதிர்கால ரகசிய திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தான் கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ளனர் தமிழக காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

கிருஷ்ணகுமாரின் மீது உள்ள குற்றச்சாட்டு சாதாரணமானது முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் அச்சிட்டு ஒட்டினார் என்பது தான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. இதற்கு அவதூறு வழக்கு போட்டாலே போதுமானது.

ஆனால் அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைத்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து அவர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வடக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர் காவல் துறையினர். தமிழக அரசின் திட்டப்படி அவருக்கு ஜாமீன் கிடைப்பது சற்றே தாமதமானது. ஆனால் அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

இந்த நிலையில் காவல்துறையினர் கிருஷ்ணகுமாரை கைது செய்தவுடன் அவரிடம் இருந்த செல்போனை தான் முதலில் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த செல்போனில் தான் அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்பான எல்லா விவரங்களையும் கிருஷ்ணகுமார் சேகரித்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதன் மூலமாக அண்ணாமலை கிருஷ்ணகுமார் பேச்சு விபரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது இதனை அடுத்து தமிழக அரசு மற்றும் திமுக மீது அண்ணாமலைக்கு கடுமையான கோபம் உண்டானது.

ஏற்கனவே வகுத்த திட்டங்களை அப்படியே நிறுத்திவிட்டு புது திட்டங்கள் மூலமாக குடைச்சல் கொடுக்க முடிவு செய்து செயல்பட்டு வருகிறார். அண்ணா மலை. திமுக தொடர்பாக ஈவேரா தெரிவித்த கருத்துக்களை வெளிப்படுத்தி அரசுக்கு கூடுதல் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறார். அதோடு அண்ணாமலையை முடக்குவதற்கு அவர்கள் வகுத்த திட்டம் சப்பென்று ஆகிவிட்டது. என பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அண்ணாமலை ஒருபுறம் திமுகவிற்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் பாஜகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் திமுகவிற்கு மிகப்பெரிய குடச்சலை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி திமுக தொடர்பான பல்வேறு விஷயங்களை கிளறிவிட்டுள்ளார். அவர் நேற்று வெளியிட்டிருந்த ஒரு வலைதள பதிவில் திமுகவின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஆரம்பகாலம் முதல் திமுக எவ்வாறு செயல்பட்டு வருகிறது, திமுகவின் நோக்கம் என்னவாக இருக்கிறது. உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் அந்த வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி மாறி, மாறி தமிழக அரசுக்கு பாஜக குடைச்சல் கொடுத்துக் கொண்டு வருகிறது ஆகவே பாஜகவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தமிழக அரசு விழிபிதுங்கி நிற்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.