ஸ்கெட்ச் போட்ட திமுக! பக்காவாக ப்ளான் போட்ட முன்னாள் அமைச்சர்!

0
79

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு ஆதாரங்களை ஒன்று திரட்டி வருகிறது என சொல்லப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கை காவல்துறையினர் விசாரணை செய்ய தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, ராஜேந்திர பாலாஜி எந்த சமயத்திலும் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்காக அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு பாஜக உறுதியுடன் இருக்கின்றது. அதற்கு ஏற்றவாறு பல விஷயங்களையும் செய்து வருவதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு மேகதாது அணை தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

தொடர்ச்சியாக பேசிய அவரிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் தெரிவித்த அண்ணாமலை யூகங்களுக்கு பதில் கொடுக்க இயலாது என்று தெரிவித்தார். பாஜகவின் கொள்கையை நம்பி யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எந்த கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட இயலாததால் அதோடு போதுமான மரியாதை கிடைக்காத காரணத்தால், பாஜகவை தேடி அனைவரும் வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.