பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்! பிடிவாதமாக மறுத்த அண்ணாமலை கார் மீது தாக்குதல்!

0
81

நாமக்கல்லில் மத்திய பாஜக அரசின் 8 வருட கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பூங்கா சாலையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் என் பி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், நகரத் தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார், மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி, இராமலிங்கம், உள்பட பலர் பங்கேற்று கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும்போது மத்திய அரசின் 8 வருட கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் 45 தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கென்று ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள் என தெரிவித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார் அண்ணாமலை.

அதோடு தமிழக அரசு மற்றும் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக விமர்சனம் செய்திருக்கிறார். அதோடு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அதன் அமைச்சர் சேகர்பாபு தொடர்பாகவும், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது பேசிய அவர் கோவில் உண்டியல் மீதுதான் அறநிலையத்துறைக்கு முழு அக்கறை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜகவின் நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். தொடர்புடையவர்கள் மீது இந்த மாதத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஜூலை முதல் வாரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களையும் பாஜக சார்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

முதல் ஆளாக ஒரு காவல் நிலையத்தை நான் முற்றுகையிடுவேன் இந்த மாநில டிஜிபிக்கு தைரியமிருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளட்டும் என்று சவால்விட்டு உரையாற்றினார் அண்ணாமலை.

இதனைத் தொடர்ந்து மேடையை விட்டு கீழே இறங்கிய அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் அவர் சென்றார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேட்டி கொடுக்க வலியுறுத்தியபோது அண்ணாமலை அதற்கு மறுப்பு தெரிவித்து காரில் ஏறியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் வாகனத்தின் வேகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த செய்தியாளர் காரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் காரை வேண்டுமென்றே பத்திரிக்கையாளர் தாக்கியதாக தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கிறார்கள்.

அதன் பிறகு அங்கிருந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் பாஜகவினரை சமாதானம் செய்து தாக்குதலுக்கு ஆளாக செய்தியாளரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.