தேர்தலில் பாஜகவின் முகமாக அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு! திமுகவை விழிபிதுங்க செய்வாரா?

0
57

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முகமாக இருக்கப்போவது அண்ணாமலையே. கட்சியில் இணைந்த நான்கே நாட்களில் துணைத் தலைவரான அண்ணாமலைக்கு தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தேர்தலின் போது கட்சியில் அவருக்கு மேலும் பிரச்சாரக்குழு தலைவர் அல்லது வேறு ஏதாவது முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.

 

மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதாலேயே அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

 

அதன் அடிப்படையிலேயே அண்ணாமலையின் சொந்த ஊரான கரூர் அல்லது பாஜகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் கோவை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் அண்ணாமலையை களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது.

 

அண்ணாமலை பாஜக மாநில துணைத்தலைவராக இருந்தாலும்கூட அவருக்காகவே தனியாக ஐடி விங், லீகல் டீல், அரசியல் ஆலோசனை குழு என தனித்தனியாக சில குழுக்கள் இயங்கி வருகின்றனர்.

 

இந்த குழுக்கள் மூலமே, கரூர் அல்லது கோவையில் அண்ணாலை போட்டியிட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை இப்போதிருந்தே தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணியில் இருப்பதால்,

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் போட்டியிடுவது பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று அண்ணாமலை டீம் கருதுகிறது.

 

கோவை மட்டும் அல்ல கரூரில் கூட அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு உண்டு. எனவே இந்த தொகுதிகளில் அண்ணாமலையின் செல்வாக்கு கூடும் போது வெற்றி வாய்ப்பு எளிதாகும் என குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், தொகுதி ஒதுக்கீட்டில் கூட கோவை மற்றும் கரூரில் ஏதேனும் ஒரு தொகுதியை எளிதாக பெற்றுவிடக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுதவிர கன்னியாகுமரியில் கூட பாஜகவிற்கு அதிக ஆதரவுகள் உண்டு என்பதால், அங்கு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது ஜாதிய வாக்குகள் தான். அங்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதால்,

 

அண்ணாமலை அங்கு போட்டியிடுவது, இந்த ஜாதிய வாக்குகள் அவரை கைவிடக்கூடும் என்பதால் அங்கு போட்டியிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

எனவே, அண்ணாமலைக்கு பாதுகாப்பான தொகுதியாக கரூர் அல்லது கோவை தொகுதியினை தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்கிறார்கள்.

 

மேலும், அண்ணாமலை பாஜகவில் இணைந்ததும் தனது சொந்த ஊருக்கு கூட செல்லாமல், கோவைக்குத்தான் முதலில் சென்றார். அவரே கூட கோவையில்தான் போட்டியிட ஆர்வம் காட்டுவார் என்கிறார்கள்.

author avatar
Parthipan K