ஆளும் கட்சியினரே தங்களை திருத்திக் கொள்ள தயாராக இருங்கள்! ஊழல் பட்டியலை வெளியிட தயாராகும் பாஜக!

0
126

மத்தியில் கடந்த 2014ஆம் வருடம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அன்று முதல் அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார். அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பலர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள், பலர் ஆச்சரியத்திற்கும் ஆளானார்கள்.

குறிப்பாக அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் பாஜக நரேந்திரமோடி தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், அவர் பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டு காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் அந்தந்த மாநில பாஜகவின் சார்ந்தவர்கள் அதனை வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில், அதனை கொண்டாடும் விதத்தில் சேவை, முன்னேற்றம், ஏழைகளுக்கான ஆட்சி என்ற நிகழ்ச்சி மாவட்டம் தோறும் வருகின்ற 15ஆம் தேதி வரையிலும் நடத்தப்படும்.

கடந்த 2014ஆம் வருடம் முதல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என பாஜகவின் மாநில தலைமை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் வருடம் சூரிய மின் உற்பத்தி 2ஜிகாவாட் என இருந்த நிலையில், தற்போது 53 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

அதோடு நோய்த்தொற்று காலகட்டத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. ஆதார் மற்றும் குடும்ப அட்டை இணைப்பால் 4 கோடி போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றன என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் வருடம் முதல் 2022ஆம் ஆண்டு வரையில் 7 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 228 சிலைகள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

மேகதாது, முல்லைப் பெரியாறு, உள்ளிட்ட அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாகவும், திமுக மறைமுகமாகவும், இரட்டைவேடம் போடுகிறது.

தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதோடு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சியை போல இருக்கிறது, ஷெல் கம்பெனிகளை வளர்க்கக்கூடிய ஆட்சியாகவும், இந்த ஆட்சி இருந்துவருகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக என தனி இலவச எண்ணை தொடங்க யோசித்து வருகிறோம். தமிழ்நாட்டில் 2 துறையில் நடைபெற்ற ஊழல் தொடர்பான விபரம் வருகின்ற 4ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

திருத்திக் கொள்ள வேண்டும் இந்த ஆட்சியை கவிழ்ப்பது எங்களுடைய நோக்கமல்ல என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை, இது தொடர்பாக அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பிக்களை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கும் என அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.