உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

0
77

ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட படிப்புகள் அனைத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது.

M-டெக், பயோடெக்னாலஜி மற்றும் மற்றும் கம்ப்யூட்டேஷ்னல் டெக்னாலஜி, ஆகிய இரண்டு துறைகளுக்கான மேற்படிப்பிற்காக இந்த வருடம் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது அண்ணாபல்கலைக்கழகம். இதற்கிடையில் இந்த துறையின் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பம் செய்திருந்த மாணவிகள் குழலி, மற்றும் சித்ரா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தெரிகிறது.

அந்த வழக்கில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பதிலாக மத்திய அரசின் 49.9 சதவீதம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவதற்கு நிர்ப்பந்தம் செய்தது இந்த கல்வி ஆண்டில் இரண்டு படிப்புகளுக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்றையதினம் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக அந்த இரு துறைகளும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ஒன்றிணைத்து மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும் படிப்பை தொடர்ச்சியாக நடத்தவும் அதோடு ஒன்பது இடங்கள் உருவாக்குவதற்கான அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கிறார்.