மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் குழு கடிதம்!!

0
69

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்க அரசிடம் சொன்னதையே கடிதமாக எழுதினேன் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகமாகும் சூழலும் உருவாகும். இதுபோன்ற காரணத்தினால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K