யார் இடத்துல வந்து யார் சீனப்போடுறது வச்சி செய்த! தமிழக அரசு கதறும் சூரப்பா!

0
99

என் மீதான புகார்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கின்றது. என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கின்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு தகுதி தேர்வு , அரியர் தேர்வு, ரத்து போன்ற விவகாரங்களில் தமிழக அரசுடைய நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்து இருக்கின்றார்.

இந்த விவகாரம் சம்மந்தமாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டன இந்த நிலையில், அவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது.

அதோடு மட்டுமல்லாமல், இந்த விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவிற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.

அந்த குழுவானது, கொடுக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே, சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், சூரப்பா அளித்துள்ள பேட்டியில்,என் மீதான பகார்கள் சம்மந்தமாக விசாரிப்பதற்கு தனி குழு அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக நியமனத்தில் ஒரு பைசா கூட நான் கையூட்டாக வாங்கவில்லை.

எந்த ஒரு முறை கேட்டிலும் ஈடுபடவில்லை என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு பணி நியமனம் அளிக்கவில்லை, என்னுடைய மகளுக்கு நான் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அவருக்கு அனைத்து தகுதியும் இருக்கின்றது.

பெயரை குறிப்பிடாமல் ஒரு சில மிரட்டல் கடிதங்களும், எனக்கு வந்திருக்கின்றது மிரட்டலுக்கு அடிபணியாத காரணத்தால் , என்மீது அவதூறு புகார்களை தெரிவிக்கின்றார்கள் என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

ஆளுநர் முதற்கொண்டு யாரையும் நான் சந்திக்கப்போவதில்லை, என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றதா என்பதை கல்வியாளர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.