கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

0
137

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழக மாநில எல்லைகள் மூடியது மட்டுமல்லாமல் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து மாவட்ட எல்லைகளும் அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா கடந்த திங்களன்று நகரி பகுதியில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பு குறித்த நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது சரஸ்வதி என்ற கர்ப்பிணி பெண் அங்கு அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் திருப்பதி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர்

அரசு மருத்துவமனையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் இயங்காத காரணத்தால், இந்த தகவலை எம்எல்ஏ ரோஜாவின் கவனத்திற்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றனர். இதனையடுத்து தனது சொந்த காரை அனுப்பி உடனே மருத்துவமனைக்கு செல்லுமாறும், மேலும் திருப்பதி மருத்துவமனைக்கு போன் செய்து கர்ப்பிணிக்கு தேவையான உடனடி மருத்துவ ஏற்பாடுகள் செய்யுமாறும் ரோஜா கூறினார். அவசர காலத்தில் கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ ரோஜாவிற்கு மக்களிடையா பாராட்டு குவிந்து வருகிறது.

author avatar
Jayachandiran