மேலும் ஒரு தடுப்பூசி இந்தியாவால் உருவாக்கப்படுமா?

0
64
கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி மட்டும்தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது. எனவே பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள பி.சி.எம். என்று அழைக்கப்படுகிற பேய்லர் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி, மறுசீரமைப்பு புரத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. “பேய்லர் மருத்துவ கல்லூரியில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் 100 கோடி டோஸ்களை தயாரிக்கிற திறன் இந்திய நிறுவனத்துக்கு உண்டு” என்கிறார் பீட்டர் ஹோடஸ்.
இந்த தடுப்பூசி ஒப்பந்தம் பற்றி பி.இ. நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பேய்லர் மருத்துவ கல்லூரியுடன் கூட்டு சேர்ந்திருப்பது இந்தியாவுக்கும், பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் ஒரு மலிவு விலை தடுப்பூசியை உருவாக்குவதை துரிதப்படுத்த உதவும். இந்த தடுப்பூசி வெற்றிகரமானதாக அமைந்தால் ஆண்டுதோறும் பல லட்சம் டோஸ் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இந்திய சீரம் இன்ஸ்டிடியுட்டின் கோவிஷீல்டு, ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகள் கிடைக்க உள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பூசி வரும் வாய்ப்பு கனிந்துள்ளது.
author avatar
Parthipan K