News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

காடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்

0

காடுவெட்டி குருவின் மறைவை அடுத்து எதிர்கட்சிகளால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்

பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருவின் மறைவால் கட்சியில் நிலவி வந்த வதந்திகளுக்கு விளக்கமளித்து முற்றுபுள்ளி வைத்தார் அன்புமணி ராமதாஸ்

பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,வன்னியர் சங்க தலைவருமான குரு அவர்கள் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அதனையடுத்து நடந்த அவரது நினைவேந்தல் மற்றும் பட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குரு அவர்களுக்கு அவர் வாழ்ந்த கிராமத்திலேயே மணி மண்டபம் கட்டப்படும் என்றும்,வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சரசுவதி சட்ட கல்லுரி வளாகத்திற்கு அவரது பெயரை சூட்டி,சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்தார்.

அவர் வாக்குறுதி அளித்தபடி கல்லூரி வளாகத்திற்கு பெயரை சூட்டி,சிலையும் திறந்து வைத்தார்.இந்நிலையில் குரு அவர்களின் மகள் அவரது உடன்பிறந்த தங்கை மகனை திருமணம் செய்து கொண்டார்.அதையடுத்து அவரது தங்கை குடும்பத்தினர் பாமக வின் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்தனர். குரு அவர்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் போது எதுவும் பேசாமல் தற்போது அவர் இல்லாத நிலையில் விமர்சனம் செய்வதில் எதிர்கட்சியினரின் சூழ்ச்சி இருப்பதாக பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிப்படி காடுவெட்டி கிராமத்தில் குரு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டுவதாக பாமகவால் அறிவிக்கப்பட்டது.இதற்காக காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரும் அவரது குடும்பத்தினரும் தங்களுடைய குடும்ப சொத்தான சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 51 சென்ட் நிலத்தை வன்னியர் சங்கத்திற்காக தானமாக வழங்கினார்கள்.

இதனையடுத்து நேற்று அந்த இடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ்,குருவின் மனைவி சொர்ணலதா மற்றும் பாமகவின் தலைவர் ஜி கே மணி ஆகியோர் வந்தனர்.இந்த நிகழ்ச்சியில் மணி மண்டபம் கட்டுவதற்கான முதல் செங்கல்லை மருத்துவர் ராமதாஸ் எடுத்து கொடுத்து தொடக்கி வைத்தார்.அதனையடுத்து அன்புமணி ராமதாஸ் மணி மண்டபத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்து தொண்டர்களிடம் பேசினார்.

Anbumani Ramadoss gives explanation for rumors about Kaduvetti J Guru - News4 Tamil Online Tamil News Website
Anbumani Ramadoss gives explanation for rumors about Kaduvetti J Guru – News4 Tamil Online Tamil News Website

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியானது அல்ல என்றும்.மாவீரன் அவர்களின் மறைவிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் குறிப்பிட்டார்.அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவிற்கு உறுப்பு மாற்று சிகிச்சை தான் சரியான தீர்வு என பல முறை கூறியும்,உடனிருந்தவர்களின் தவறான ஆலோசனையால் உறுப்பு மாற்று சிகிச்சையை தவிர்த்து கொண்டே இருந்தார் என்றும் விளக்கமளித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவீரனின் தாயாரும்,அவரது பிள்ளைகளும் இருந்திருந்தால் மகிழ்ச்சியளிதிருக்கும் என்றும்,அவரது மகளின் திருமணம் இந்த சமுதாயத்தால் கொண்டாட பட வேண்டியது எனவும்,அவருக்கு நல்ல வசதியான இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்ததாகவும்,தற்போது அவரது பிள்ளைகள் நடந்து கொண்ட விதத்தில் எந்த கோபமும் இல்லை எனவும் வருத்தம் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்தார்.அவரது மகன் திருந்தி மீண்டும் தங்களிடம் வருவார் என்றும்,அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது தான் மாவீரனின் ஆசை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன் மாவீரன் இருந்த காலத்தில் அவரை எதிர்த்தவர்கள்,ஏளனம் பேசியவர்கள்,கொச்சை படுத்தியவர்கள்,அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி கொலை முயற்சி செய்தவர்கள் என அனைவரும் தற்போது அந்த குடும்பத்தினருடன் உள்ளனர்.இவர்கள் அங்கிருப்பதால் தங்களுக்கோ அரசியலுக்கோ எதுவும் நடந்துவிட போவதில்லை.தேர்தல் நெருங்கி வருவதால் சுயநலத்தால் பணத்திற்காகவும்,பதவிக்காகவும் அந்த குடும்பத்தினரை பயன்படுத்தி கொள்வதாக குறிப்பிட்டார். இது ஒரு குடும்ப பிரச்சனை எனவும் இதனால் தேர்தலுக்கோ கட்சிக்கோ எதுவும் நடந்துவிட போவதில்லை எனவும் தொண்டர்கள் அனைவரும் இதில் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் கூறினார்.

மாவீரனின் ஆசையான பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நிறைவேற்ற அனைவரும் சபதமேற்று கொள்ள வேண்டும் என்றும்,இடையில் எது வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் பாமக வளர்ந்து வருவதை கண்டு நேரிடையாக எதிர்க்க தைரியமில்லாதவர்கள் தான் இது போன்ற சூழ்சிகளை செய்து வருகிறார்கள் எனவும்,இதை ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் எனவும்,இளைஞர்கள் இது போன்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும்,சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றும்,எது செய்தாலும் அது நீங்களும் தமிழ் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே,தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல கல்வி,சுகாதாரம்,வீடு,குடிநீர்,சாலை வசதி,சாக்கடை வசதி மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம் இதுவே தான் மாவீரனின் நோக்கமும் என்றும் கூறினார்.

இவ்வாறு கடந்த சில நாட்களாக பாமக வின் மீது காடுவெட்டி குருவின் உறவினர்கள் மற்றும் எதிர்கட்சிகளால் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கமளித்து அன்புமணி ராமதாஸ் முற்று புள்ளி வைத்துள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

#Anbumani #Ramadoss #gives #explanation #rumors #about #Kaduvetti #Guru