அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

0
75

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எந்த ஒரு மதிப்பெண்ணில் குறிப்பிடாமல் இருக்கும் என்றும் தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவை உண்மையென்றால் அரசு முடிவு மிகவும் தவறானது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு.

மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு அதன் பிறகு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியாக கொண்ட பணிகளுக்கு செல்வதிலும் மேல்நிலை வகுப்புகளில் சேர்ந்து கொள்வதிலும் சிக்கல் உண்டாகும் என்று தெரிவித்திருக்கின்றார் மருத்துவர் அன்புமணி.

நோய் தொற்று காரணமாக, தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட சென்ற வருடம் கூட சான்றிதழ்களில் மதிப்பெண்கள் வழங்கப் பட்ட சூழ்நிலையில், இந்த வருடம் மதிப்பெண்கள் வழங்கப்படாவிட்டால் அதுவே மாணவர்களையும் அவர்களின் கல்வித் திறனை கொச்சைப்படுத்தும் செயலாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

2020 21 கல்லூரிகளிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு அரசு ஆணையிட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.