மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

0
52

மாமன்னனை தொடர்ந்து மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

தற்போதைய சினிமா காலகட்டத்தில் ஒருபடத்தை வெற்றியடைய செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.இதுபோன்ற சவாலை அசால்ட்டா எதிர்கொண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துவரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ்.இவர் 2006 இல் தமிழ் திரையுலகில் கால்பதித்தார் . தற்பொழுது இயக்குனராக உள்ள மாரி செல்வராஜ் அவர்கள் ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார்.அதன் பின்னர் இயக்குனர் ராமுடன் இணைந்து துணை இயக்குனராக தங்க மீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கினார் , இத்திரைப்படம் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பெரும் புகழை தேடித்தந்தது.அத்துடன் இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை அள்ளியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை அவர்களை வைத்து இயக்கிய அவரது இரண்டாவது படமான ‘கர்ணன்’ அனைவரின் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி படமாக உருவெடுத்தது .

மேலும் ,தொடர் வெற்றிக்கு பிறகு ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாமன்னன்’ .இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில், ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.பொதுவாக மாரி செல்வராஜ் படம் என்றாலே சமூக நீதி என்ற பெயரில் சாதி ரீதியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோன்று தான் மாமன்னன் அமைந்திருந்தது. மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில் மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் அவர்கள் ‘வாழை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.வாழை திரைப்படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்துள்ளார்.மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் வாழை திரைப்படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்தப்பதிவில் வாழை உங்களின் சிறந்த படைப்பு அடுத்து உங்கள் மேஜிக்கிற்க்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாரி செல்வராஜின் மற்ற படங்களை போலவே இந்த வாழை திரைப்படத்தின் கதையும் கருத்தும் சாதி ரீதியாக இருக்குமா அல்லது வேறு விதமாக இருக்குமா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.