விமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!

0
81

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகைப்பிடித்ததால் நடந்த சம்பவம்தான் மிகவும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1988 விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. அதேபோல் இன்டர்நேஷனல் விமானத்திலும் புகை பிடிப்பது மிகவும் அபாயகரமான ஒன்று என்று தடை செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் ஒருவர் புகை பிடித்துள்ளார். விமானம் நுழைவாயில் நோக்கி சென்ற பொழுது அந்தப் பெண் சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிப்பதை சக பயணி ஒருவர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த விமானத்தில் பயணித்த சக பயணியான அலெக்சா மஜதலாவி என்பவர் வீடியோவை எடுத்துள்ளார். அதை அவர் டிக் டோக்கிலும் பகிர்ந்து கொண்டுள்ளார். சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்றின் பின் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்ட பொழுது தரை இறங்கிய பின் நுழைவாயிலுக்கு செல்ல விமானம் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டபொழுதுதான் அந்தப் பெண் சிகரெட்டை வெளியே எடுத்து புகைக்க ஆரம்பித்துள்ளார்.

 

https://www.dailymail.co.uk/news/article-9925763/Woman-taken-Spirit-Airlines-lighting-cigarette-blowing-smoke-passengers-faces.html#v-2234423553431914773

நாங்கள் தரை இறங்கினோம் பின் சிறிது நேரத்தில் நாங்கள் டாக்ஸிங் செய்துகொண்டிருந்தோம். உண்மையிலேயே அந்தப் பெண் என் கண் முன்னாலேயே ஒரு சிகரெட்டை இழுத்து புகை பிடித்துக் கொண்டிருந்தார் என்று மஜதலாவி கூறினார். மேலும் அந்தப் பெண் ஒரு ஆஸ்துமா நோயாளி என்றும் அடிக்கடி அவர் இன்ஹேலர் பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

அந்தப் பெண் புகை பிடித்துக் கொண்டிருப்பதை மஜதலாவி விமான குழுவினரிடம் சொல்லி எச்சரிக்கை செய்து உள்ளார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யாமல் விரும்பினால் வேறு இருக்கைக்கு செல்லும்படி கூறி உள்ளனர். பின் சட்ட அமலாக்க அதிகாரிகளை வரவழைத்து விமான ஊழியர்களின் வேண்டுகோளின் பெயரில் அந்தப் பெண்ணை விமானத்தில் இருந்து வெளியேற்றினர். அவள் எதுவும் சொல்லாமல் அதை ஒப்புக் கொண்டால், ஆனால் அவரை கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் புகைபிடிப்பது 1988ல் தடைசெய்யப்பட்டது. அதேபோல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும் 2000ல் புகை இல்லாததாக இருக்கவேண்டும் என்றும் அமலாக்கப்பட்டது.

author avatar
Kowsalya