முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

0
49

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது.

இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று சாக்கில் மூட்டை கட்டி உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தஸ்லீம் என்ற இளைஞர் ஒருவர் ஓம்பிரகாஷ் என்னும் பால் விவசாயிடம் தஸ்லீம் பணியாற்றி வந்தார் . தஸ்ஸீம்,ஓம் பிரகாஷின் வீட்டில் உதவியாளராக 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார்.

கொரோனாவின் காரணத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓம்பிரகாஷ் அவரின் உதவியாளரான தஸ்ஸீமுக்கு உண்டான சம்பளத்தை பாதியாக குறைப்பதாக கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. வாய்த் தகராறு அடிதடியாக மாறியது. இந்த சம்பவத்தில் ஓம்பிரகாஷ் அவரின் உதவியாளர் தஸ்ஸீமைக் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தஸ்லீம் இரவு ஓம்பிரகாஷ் தூங்கும் பொழுது அவரை கட்டையால் அடித்து கொன்று,அவரின் கழுத்தை அறுத்து அவரது உடலை சாக்கில் கட்டி கிணற்றில் வீசினார். ஆனால் மறுநாள் காலை தனது முதலாளி வெளியூர் சென்றுள்ளதாக அவரின் வீட்டாரிடம் பொய் உரைத்தார். வெகுநேரமாகியும் ஓம்பிரகாஷ் குறித்து தெரியவில்லை என்பதால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் பயத்தால் தஸ்ஸீம் தலைமறைவானார்.
இந்நிலையில் அவர்கள் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை மக்கள் கண்டறிந்தனர். பிறகு அங்கு வந்த போலீசார் செய்த சோதனையில் கிணற்றில் கிடந்த ஓம் பிரகாஷின் சடலத்தை மீட்டனர். மேலும் அவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு இதற்கு காரணமான குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.

author avatar
Parthipan K