விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கனிமொழி செய்த அந்த காரியத்தால்! நெகிழ்ந்து போன குடும்பம்!

0
104

லடாக் எல்லையில் நடந்த ஒரு விபத்தில் பலியான கோவில்பட்டி ராணுவ வீரர் உடைய குடும்பத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுதல் தெரிவித்ததோடு 2 லட்சம் நிதி உதவியும் வழங்கி இருக்கின்றார்.

தூத்துக்குடிக்கு அருகில் இருக்கின்ற கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவருடைய மகன் கருப்பசாமி. இவர் கடந்த 14 வருடங்களாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றார். நாயக் பதவியை வகித்து வந்திருக்கின்றார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணிபுரிந்து வந்த இவர் விபத்தில் வீரமரணமடைந்து இருக்கின்றார். இது சம்பந்தமாக ராணுவத்தின் தரப்பிலிருந்து கருப்புசாமியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

உயிரிழந்த கருப்புசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், சுகன்யா, வைஷ்ணவி என்ற இரு மகள்களும், பிரதீப் ராஜ் என்ற மகனும் இருக்கிறார்கள். கருப்புசாமி இரண்டு மாத விடுமுறையில், ஊருக்கு வந்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு சென்றிருக்கின்றார்.இதன் காரணமாக அந்த கிராமமே மிகுந்த சோகத்தில் இருக்கின்றது. உயிரிழந்த கருப்புசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்த கிராமத்தில் கருப்புக்கொடி ஏற்றி அந்த கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், திமுகவின் மகளிரணி மாநில செயலாளரும் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி, மற்றும் கீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் கருப்புசாமி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். அதோடு, 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கியிருக்கிறார்கள். உயிரிழந்த ராணுவ வீரர் கருப்புசாமி அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்றுக்கொள்வதாக கனிமொழி உறுதியளித்து இருக்கின்றார்.