மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!

0
121
An additional offer provided by the Municipal Transport Corporation! Monthly Travel Card Sale Period Extension!
An additional offer provided by the Municipal Transport Corporation! Monthly Travel Card Sale Period Extension!

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!

கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மாநகர போக்குவரத்து சார்பில் மாதம்தோறும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ 1000 மதிப்பில் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகின்றது.இந்த திட்டத்தின் மூலம் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக மாதம்தோறும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்ததால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதனால் போக்குவரத்து சேவைகளும் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் இந்த மாதாந்திர பயண சீட்டு விற்பனை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 13 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் பயணிகளின் நலன் கருதி மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை அட்டை,ஆயிரம் மதிப்பிலான பயண அட்டைகளுடைய விற்பனை கூடுதலாக ஒரு நாள் அதாவது ஜனவரி 23 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K