வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி!

0
78
An 11-year-old student who went home in a flooded area has died tragically!
An 11-year-old student who went home in a flooded area has died tragically!

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது. ஆனால் இந்த முறை எப்போதும் விட அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் ஆரம்பித்ததில் இருந்தே பலத்த கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் சென்னை முழுவதுமே மழை வெள்ள நீரால்  சூழ்ந்துள்ளது.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும், எல்லார் வீட்டைச்சுற்றியும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் சிட்டிபாபு. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் கமலி. ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயது 11 ஆகும்.

நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அதன் காரணமாக கலைஞர் நகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும் சிட்டிபாபுவின் வீட்டிலும் மழைநீர் வெள்ளம் புகுந்து அதன் காரணமாக இரண்டு மகள்களையும் கலைஞர் நகர் பத்தாவது தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சிட்டிபாபு அனுப்பி வைத்திருந்தார்.

மாலை ஆறு முப்பது மணி அளவில் கமலி உட்பட மூன்று சிறுமிகள் அருகில் உள்ள கடைக்கு சென்றனர். அப்போது திடீரென மின்சாரம் இயங்க ஆரம்பித்துள்ளது. அதன் காரணமாக அங்குள்ள மின்சார பெட்டியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து இருந்ததன் காரணமாக மின்சாரம் வந்ததும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அந்த நீரில் மாணவி கமலி கால் வைத்ததும் மின்சாரம் தாக்கியதன் காரணமாக தூக்கி வீசப்பட்டார். அதைபார்த்த உடனே அருகில் இருந்த இளைஞர்கள் சுதாரித்துக் கொண்டு 2 சிறுமிகளையும் தண்ணீரில் இருந்து உடனடியாக மேலே தூக்கினார்கள். அதை தொடர்ந்து இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதிகளில் மின்சாரத்தை துண்டித்தனர்.

அதன்பின்பு மாணவியை மீட்டு திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி இறந்தது யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.