மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

Amy is back! Fan excitement!

Amy is back! Fan excitement!

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. அதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான் என கூறியுள்ளார். இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்துள்ளார்  எமி ஜாக்சன். தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் எமி ஜாக்சன்  கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..மேலும் விரைவில் இந்த படத்திற்க்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

">
Exit mobile version