பால் கொள்முதல் செய்யும் அமுல் நிறுவனம்!! பால் உற்பத்தியாளர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!

0
122
Amul company that buys milk!! Attractive announcements for dairy farmers!!
Amul company that buys milk!! Attractive announcements for dairy farmers!!

பால் கொள்முதல் செய்யும் அமுல் நிறுவனம்!! பால் உற்பத்தியாளர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தான் உபயோகப் படுத்துகிறார்கள். ஆவின் நிறுவனம், தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம்  பால் கொள்முதல் செய்கிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி விற்பனை செய்கிறது.

தனியார் நிறுவனங்களின் பால் விலையை விட குறைவாக இருப்பதால், ஆவின் நிறுவன பாலை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் கொள்முதலை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவாட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்கலாம் எனவும், பால் கொள்முதல் செய்ததில் இருந்து 10 நாட்களில் பணம் வழங்கப்படும். பாலின் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளது.

மேலும் சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யலாம் எனவும் அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களினால் ஆவினின் விற்பனை குறைந்துள்ள நிலையில் தற்போது அமுல் நிறுவனமும் புதிதாக வந்துள்ளது ஆவினின் விற்பனையை வெகுவாக பாதிக்கும்.

மேலும் ஆவின் நிறுவனம் தமிழக அரசின் கீழ் இருப்பதால் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. பணத்திற்கு பிரச்சினை இல்லாதவர்கள் தொடர்ந்து ஆவினுக்கு பால் வழங்குகிறார்கள். இந்நிலையில் அமுல் நிறுவனம் செய்த விளம்பரத்தை பார்த்து, சில பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்துடன் பேசி வருகின்றனர். மேலும் பால் பணம் நிலுவை மற்றும் கொள்முதல் விலை உயர்த்தாமல் இருப்பது போன்றவை அமுல் நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது.

அமுல் நிறுவனத்தின் செயல்பட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பல்வேறு கட்சி தலைவர்களும் அமுல் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் இதுவரை பால் கொள்முதலை தொடங்கவில்லை. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும் அமுல் நிறுவனத்தின் இந்த முயற்சி ஆவின் நிறுவனத்தை அழித்து விடக்கூடு என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி கூறினார்.

author avatar
CineDesk