சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

0
60

சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுகவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பியிருந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடைய செய்தார்.

அதோடு டிடிவி தினகரனையும் கட்சி மற்றும் அரசியலில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் டிடிவி தினகரன் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கூட்டணியில் தேமுதிக ஒன்றிணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. அதோடு மட்டுமல்லாமல் அந்த கூட்டணியில் பச்சமுத்து தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன.

இந்த நிலையில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் பூத் செலவிற்காக கூட எந்தவிதமான பணமும் வாங்காமல் அந்த கட்சியை சார்ந்த தொண்டர்கள் வேலை செய்தார்கள் இருந்தாலும் இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் போட்டியிடுவதால் நிச்சயமாக அதிகளவில் பணம் கிடைக்கும் என்று தேமுதிக தொண்டர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அவருடைய சக்திக்கு மீறி 20 லட்சம் வரையில் செலவு செய்து இருக்கின்றார். ஒரு சிலர் கடன் வாங்கி செலவு செய்து இருக்கிறார்கள். காரணம் தலைமையிலிருந்து நிச்சயமாக பணம் வரும் என்று அவர்கள் நம்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த கட்சியின் தலைமை நம்பி செலவு செய்தவர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைந்திருக்கிறார்கள். அதோடு கட்சியின் தலைமை பணம் கொடுக்கும் என்று காத்திருந்து காத்திருந்து கையில் இருந்த அனைத்து பனங்களையும் செலவு செய்து விட்ட படியால் வாக்குச்சாவடி செலவிற்கு கூட பணம் கொடுக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் வந்தவாசி சட்டசபை தொகுதி முழுவதும் கிழக்கு ஒன்றியத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில் வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஏஜெண்டுகளை கிடையாது. வாக்குச்சாவடி செலவிற்கு பணம் வாங்காமல் வேலை செய்த தேமுதிக தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணம் வரும் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். இதன்காரணமாக செலவிற்கு பணம் கொடுக்காமல் வேலை செய்த எங்களுடைய கட்சி தொண்டர்கள் பணம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள் என தேமுதிக தொண்டர்கள் புலம்பி வருகிறார்களாம்.

வந்தவாசி சட்டசபை தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலுமே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களுக்கும் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார்களே என்று புலம்பி வருகிறார்கள் இனியும் இந்த கட்சியில் இருந்தால் எந்த விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை என்று வேறு கட்சிக்கு செல்வதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராகி விட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இது டிடிவி தினகரன் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் தினகரனின் எண்ணம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக வேலை பார்ப்பது தான் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக தான் தமிழகம் முழுவதிலுமே அந்தக் கட்சியின் சார்பாக எந்த இடத்திலும் பணம் செலவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதோடு இந்த முறை அதிமுக வெற்றி பெற்று விட்டால் சசிகலா தலைமையில் அந்தக் கட்சி ஒன்றிணையும் என்று சசிகலா உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே அதனை மனதில் வைத்துதான் டிடிவி தினகரன் இவ்வாறு ஒரு திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.