அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு??

0
94
Ammatiyo imputtu price ?? Can not believe! What the hell is that ??
Ammatiyo imputtu price ?? Can not believe! What the hell is that ??

அம்மாடியோ இம்புட்டு விலையா??நம்பவே முடியல! அதுல அப்படி என்ன இருக்கு??

உலகிலேயே மிகவும் அதிசயமான மற்றும் அதிக விலை கொண்ட வாட்ச் என்றால் அது ரோலக்ஷாகா தான் இருக்க வேண்டும். உலகிலேயே ரோலக்ஸ் வாட்ச் அதிக விலை கொண்டது. ஜேம்ஸ்பாண்ட் முதல் அதிக பிரபலங்களால் இன்று வரை அணியப்பட்ட ஒரு வாட்ச் தான் ரோலக்ஸ்.ஒரு வாட்ச் விலை 17 மில்லியன் டாலர் ஆகும்.நூற்றாண்டு பெருமையை உணர்ந்தும் அந்த ரோலக்ஸ் வாட்ச் குறித்த சில அற்புதமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.சுவிட்சர்லாந்தில் ஒரு ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்க ஒரு வருட காலத்தை அந்த நிறுவனம் செல விடுகிறது.

இதில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கும் அதில் ஒவ்வொரு அமைப்புகளும் கைகளாலே பொருத்தப்பட்டிருக்குமாம். இதற்கான அனைத்து உதிரி பாகங்களையும் ரோலக்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரித்து கொள்கிறது.ஒரு சிறிய பாகங்களை கூட ரோலக்ஸ் நிறுவனம் பிற நிறுவனங்களிலிருந்து வாங்காதாம். ஒவ்வொரு ரோலக்ஸ் வாட்ச்-சும் காற்றழுத்த கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படும். அதில் ஏதாவது காற்று கசிவு அல்லது தண்ணீர் ஊறுதல் தென்பட்டால் அந்த வாட்ச் இரண்டாம் தளத்திற்கு அனுப்பி சந்தையில் வெளியிடாமல் முற்றிலும் அகற்றப்பட்டு வரும்இந்த உலகில் மிகவும் விலை உயர்ந்த துருப்பிடிக்காத ஸ்டீலை ரோலக்ஸ் நிறுவனம் பயன்படுத்துகின்றது.

மற்ற உயர் நவீன கைக்கடிகாரங்களுக்கு 316 L கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டால் ரோலக்ஸ் இல் மட்டும் 904 L எஃகு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் எந்த குழியில் இருந்தாலும் துரு அரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படாது.1968- ஆம் ஆண்டு ஸ்டைன்லேஸ் ஸ்டீல் மற்றும் தோலால் உருவாக்கப்பட்ட டேடொனாரக ரோலக்ஸ் வாட்ச் நியூயார்க்கில் நடந்த பிலிப்ஸின் ஏலத்தில் 18 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் 139 கோடிக்கு விலைபோனது.இந்த உலகிலேயே தனது தயாரிப்புக்கு சொந்த தங்கத்தைப் பயன்படுத்த கூடிய நிறுவனம் ரோலக்ஸ் நிறுவனம் மட்டுமே. அதற்காக ஸ்விட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் ஒரு பவுண்டரியை ரோலக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த தலைமையகம் அத்தனை சிறப்பு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.இதன் ஒரு தளத்தில் பணியாற்றும் ஊழியர் வேறு தளத்திற்கு செல்ல முடியாதபடி செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. கைரேகை ஸ்கேனர்கள், சிறப்பு வங்கி பெட்டகங்கள் என அனைத்தும் அந்நிறுவனத்தில் உள்ளது.ரோலக்ஸ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று பலருக்கும் தெரியாது. தற்போதைய நிலையில் தான் ரோலக்ஸ்னா ஆடம்பரம் என்று அழைக்கப்படுகிறது.வாட்ச் மேக்கர்கள் இந்தப் பெயர் horlogerie exquise ஏண்டா பிரின்ஸ் வார்த்தையில் வந்ததாக கூறுகின்றனர்.

இந்த வாட்ச் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டாலும் உண்மையில் அது லண்டனில் உருவானது. Hans Wilsdorf, Alfred Davis ஆகிய இருவரும் முதன் முதலில் Wilsdorf and Davis என்ற பெயரில் நகைகளை விற்று வந்தனர். அதன் பிறகு 1919 ஆம் ஆண்டு உலகப் போர் நடந்ததால் தங்களுடைய நிறுவனத்தை சுவிஸர்லாந்தின் ஜெனிவாவுக்கு மாற்றி அங்கு ரோலக்ஸ் தயாரித்து வந்தனர்.அதுதான் இப்போது உலகம் முழுவதும் மிக விலை உயர்ந்த பொருளாக உள்ளது.

Rolex SA மற்றும் அதன் துணை நிறுவனமான Montres TUDOR SA ஆனது Rolex மற்றும் Tudor பிராண்டுகளின் கீழ் விற்கப்படும். ரோலக்ஸ் வாட்ச்களின் முக்கிய சிறப்பம்சம் டயலில் உள்ள நிமிடங்கள் அனைத்தும் ரோமன் எழுத்தில் இருந்தாலும் 4 அதாவது IV- க்கு பதில் IIII என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் ஆழ்கடலில் 12,000 மீட்டரில் 39,370அடி ஆழத்தில் இருந்தாலும் 7 மணி நேரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் செயல்படக்கூடியது.

இதன் குறைந்தபட்ச விலை 4 லட்சம் ரூபாய் என சொல்லப்படுகிறது.நாம் சாதாரண வாட்ச் பயன்படுத்திவிட்டு பிறகு அதனை விற்றால் குறைந்த பணம் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த ரோலக்ஸ் வாட்ச் பல வருடம் பயன்படுத்திவிட்டு விற்றாலும் அதன் மதிப்பு குறையாது.அப்படி சிறப்பு பெற்ற ஒன்றுதான் இந்த ரோலக்ஸ் வாட்ச். இதை பற்றி தெரியாதவர் இருந்தால் கூட இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

author avatar
Parthipan K