அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

0
67

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் வருடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் தென்மண்டலத்தில் சில தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டல பொறுப்பாளர்கள் இடம் ஆலோசனை செய்து வருகின்றார் முதல்வர் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கின்றது இந்த பட்டியலில்

நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார் உள்துறை அமைச்சரின் முன்னிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவிக்க அதன் என்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். இதன் காரணமாக அமித்ஷா இந்த நிகழ்வில் அரசின் பேசினாலும் அதிமுக கூட்டணி பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை அந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு அமித்ஷா அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு திரும்பி விட்டார் அவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உடனடியாக அந்த ஹோட்டலுக்கு விரைந்தனர் சிறிது நேரத்தில் அமித்ஷாவின் அறைக்கு உள்ளே சென்று இருக்கிறார்கள்.

அமித்ஷா உடைய அறையில் அவருடன் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷ் இருந்திருக்கின்றார்.

அந்த சந்திப்பின்போது அமித்ஷாவிடம் பி.எல். சந்தோஷ் ஒரு பட்டியலை கொடுத்திருக்கின்றார் அதை வாங்கி ஒரு முறை பார்த்துவிட்டு அந்த பட்டியலை அப்படியே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் கொடுத்து இருக்கின்றார் அமித்ஷா.

அந்த பட்டியலில் 50 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன பாஜகவுக்கு நம் கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகளில் உறுதியாக வேண்டும் அதை இந்த ஐம்பது தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் 15 தொகுதிகள் உங்களுடைய சாய்ஸாக கொடுத்திருக்கின்றோம் என்று அமித்ஷா தெரிவித்திருக்கின்றார்.

இந்த 35 தொகுதிகளில் கொங்கு மண்டலத்தில் 10 தொகுதிகள் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் 6 தொகுதிகள் சென்னையில் 6 தொகுதிகள் உள்பட தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன இதில் 10 தொகுதிகளை கேட்கின்றது கோவை திருப்பூர் சேலம் மாவட்டங்களில் அந்த தொகுதிகள் வருகின்றன. மாவட்டத்தில் இருக்கின்ற 6 தொகுதிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளன அவற்றில் சில தொகுதிகள் நெல்லை தூத்துக்குடி சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சில தொகுதிகளை எதிர்பார்க்கின்றது பாஜக அதேபோல சென்னை துறைமுகம் ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகள் பாஜகவின் பட்டியலில் இருக்கின்றது.

இவ்வாறாக 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தன் கையால் கொடுத்து அமைச்சா் இதிலிருந்து 35 தொகுதிகள் பாஜகவிற்கு வேண்டும் உங்கள் முடிவை தெரிந்து அதன் அடிப்படையில் அடுத்த கட்டம் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.

உள்துறை அமைச்சர் கொடுத்து அந்தப் பட்டியலை வைத்து கொண்டு தான் அதிமுகவின் தலைமை விவாதங்கள் நடக்கின்றது அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுடைய மிக சாதகமாக தொகுதிகள் என அமைச்சர்கள் அடையாளம் கண்டு அதைத் தொடர்ந்து வேலை செய்து வருகின்றார்கள் அமிர்ஷா கொடுத்த பட்டியலில் அந்த அந்த தொகுதிகளின் பெயர்களும் இருக்கின்றன இதன் காரணமாக ஒவ்வொரு மண்டலத்திலும் பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்ற இயலுமா என்று அதிமுகவில் தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

அமித்ஷா கொடுத்த பட்டியலை கையில் வைத்துக்கொண்டு முதல்வரும் துணை முதல்வரும் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அதிமுகவுடன் கூட்டணி தற்போதைய நிலை அமித்ஷாவின் பட்டியலுக்கு அதிமுகவினர் பதில் என்ன என்பதை பொருத்தே கூட்டணியின் உறுதியும் இருக்கின்றது.