டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!

0
110

டெல்லி வன்முறையை தூண்டுவதே எதிர்க்கட்சிகள்தான்! அமித்ஷா ஆவேசம்!

சிஏஏ சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா பேசுகையில்;

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்றும், இதனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இச்சட்டம் பக்கத்து நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கான குடியுரிமை வழங்கும் சட்டம்தான், இதனால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்றும் அழுத்தமாக கூறியுள்ளார். இந்த சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வெளிப்படையாக பேசினார்.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் EVKS இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; குடியுரிமை சட்ட திருத்தம் சம்பந்தமாக யாரும் போராட்டத்தை தூண்டி விடவில்லை என்றும், இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்பட போகிறவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே களத்தில் இறங்கி போராடுவதாக கூறினார்.

வடகிழக்கு டெல்லியில் நடந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான வன்முறையில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வழக்கு எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Jayachandiran