கொரோனா!! குணமடைந்த 10ல் ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு… அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு!!

0
84

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 10 நோயாளிகளில் ஒருவர் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துமனைக்கு திரும்பும் சூழல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் 10 நோயாளிகளில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக தெரியவந்துள்ளது. காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் மருத்துவமனை வருவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 1,400 நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K