ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

0
55
Ambulance banned! Patients lament!
Ambulance banned! Patients lament!

ஆம்புலன்சுக்கு தடை! நோயாளிகள் புலம்பல்!

கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து பல உயிர்களை பலி எடுத்து கொண்டு உள்ளது.எல்லா மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் அனைத்து நோயாளிகளும் அவதிப்படுகின்றனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள், மற்றும் அனைத்து வண்டிகளும் தெலுங்கானா வழியே தான் சென்று வரும்.இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் தெலுங்கானாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதை பற்றி சூர்யபேட்டை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ஆந்திர பிரதேசத்தில் இருந்து கொரோனா நோயாளிகள் தெலுங்கானா வழியே அனைத்து வாகனங்களும் செல்வதால் நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கானா வழியில் வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அப்படி சோதனை செய்யும் போது, அவர்களிடம் கொரோனா கட்டுப்பாட்டு மைய சுகாதார இயக்குனரின் அங்கீகரிக்கப்பட்ட பாஸ் அல்லது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட கடிதம் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.மேலும் பொது மக்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களும், இருந்தால் மட்டுமே தெலுங்கானா வழியே செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன் எதிரொலியாக கரிகபாடு என்ற இடத்தில் இருக்கும் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த ஆம்புலன்சுகள் பலமணி நேரங்களாக காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கட்வால் பகுதியில் சிக்கி தவித்த பெண்மணி ஒருவர் கூறுகையில், ஆந்திரா – தெலுங்கானா எல்லையில் அதிகாலை முதலே காத்து இருப்பதாக மிகவும் வருந்தினார்.

ஆக்சிஜன் தீர்ந்த போது, நிருபர்கள் தான் தனக்கு உதவி செய்தார்கள் எனவும் தெரிவித்தார்.அவர்களின் உதவி கிடைத்ததால் கர்னூல் பகுதிக்கு சென்று ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டு ஆம்புலன்சில் திரும்ப வந்ததாகவும், இந்த ஆக்சிஜனும் இரண்டு மணி நேரத்தில் தீர்ந்து விடும் என்றும், கவலைப்பட்டார்.

இதைப்பற்றி இந்த இரண்டு மாநிலங்களின் அரசாங்கங்களும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என வேதனை தெரிவித்தார்.