பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

0
161
#image_title

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; மூன்று காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர் தனி பிரிவு காவலர்கள் என மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏ எஸ் பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் தொடர்ந்து சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை 10க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி தங்களது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. இந்த சூழலில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபராக கருதப்பட்ட வி கே புரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் பணி செய்த இரண்டு தனிப்பிரிவு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் நெல்லை மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர் அம்பை உட்கோட்ட பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்டவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் பர்வேஷ் குமார் உத்தரவின் பேரில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் நடைபெற்றதாக கருதப்படும் காவல் நிலையங்களின் ஆய்வாளர்களான அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி விகேபுரம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன் அம்பாசமுத்திரம் காவல் நிலைய தனி பிரிவு காவலர் சந்தனகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
Savitha