ஏகப்பட்ட நஷ்டம்! கம்பெனியை இழுத்து மூடுங்கப்பா அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

0
144

அமேசான் அகாடமியின் எட்டெக் பிரிவு அமேசான் ஃபுட் பிரிவை எடுத்து அமேசான் இந்தியாவில் அதன் விநியோக வணிகமான அதன் B2B அமேசான் டிஸ்ட்ரிபுஷனை மூடி இருக்கிறது.

வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மறு ஆய்வு செயலமுறையை தொடர்ந்து அமேசான் விநியோகம் நிறுத்தப்படுவதாக அமேசான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமேசான் விநியோகமானது உள்ளூர் கடைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதாக இருந்தது. இது கர்நாடகாவில் பெங்களூரு, மைசூர் மற்றும் ஹுப்பள்ளி உள்ளிட்ட 3 நகரங்களில் செயல்பட்டு வந்தது.

அமேசான் இந்திய சந்தையில் உறுதியாக இருப்பதாகவும் மளிகை பொருட்கள் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஃபேஷன் அழகு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வதாகவும் அமேசான் தெரிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் சேவைகளின் முன்னேற்றம் மற்றும் திறனை நிறுவனம் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்கிறது. மற்றும் அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் மாற்றங்களை செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி எட்டெக் கையை மூடுவதாகவும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி உணவு விநியோகப் பிரிவை மூடுவதாகவும் அறிவித்தது. மே மாதம் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான் புட் உணவு கூட்டாளர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்.

பெர்ன்ஸ்டீன் அறிக்கையின் அடிப்படையில் ஆறு புள்ளி ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்தாலும் இந்திய வணிகத்திலிருந்து லாபம் தொடர்ந்து குறைந்து வருவதால் 3 வணிகங்களை மூட அமேசான் முடிவு செய்திருக்கிறது.

அமேசான் போன்ற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சரக்கு தலைமையிலான மாதிரி இயங்க விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று அது தெரிவித்திருக்கிறது.

அத்துடன் பொருளாதார காரணத்தால் சுமார் 10,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் வேலையிலிருந்து நிறுத்தி உள்ளது.

இந்தியாவில் ஊழியர் சங்கம் அமேசான் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டி புகார் வழங்கியது. அதனைத்தொடந்து நிறுவனத்திற்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பியது.