தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?

0
120

தேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?

நமது இயற்கை தரும் அற்புத மான ஒன்றுதான் தேன். முதலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இந்த தேன் பெரிதும் பயன்படுகிறது. இந்த தேனை ஒவ்வொரு பொருளிலும் கலந்து சாப்பிடுவதால் அதற்கேற்ற உடல் உபாதைகள் குணமாகும். எடுத்துக்காட்டாக தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும்.

அதுவே பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை கூடும். உணவின் தன்மை கேட்ப தேனின் மருத்துவம் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் எதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதை இப்பதிவில் காணலாம்.

உடல் சோர்வு உள்ளவர்கள் பல சாறுடன் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

மாதுளை பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புதிய ரத்தம் ஊறும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட இருமலாக இருந்தாலும் குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் புண் வாய்ப்புண் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

அதிக பித்தம் உள்ளவர்கள் இஞ்சி உடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட நல்ல தீர்வை காணலாம்.