பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!!

0
175
#image_title

பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!!

தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி சீமான் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த மோதல் குறித்து விமான நிலையத்தின் காவல்துறை சார்பில் இரு தரப்பு மீதும் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில் இருவரும் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நோக்கில் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.எனவே இது குறித்து விசாரணை செய்ய இன்று ஆஜராகும் படி நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுகவினர் இருவருக்கும் நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் இன்று ஆஜரான நிலையில் விசாரணை முடிந்த பிறகு வெளியில் வந்து அங்கு இருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது பிரதமர் மோடி அவர்களை அவதூறாக ராகுல் காந்தி பேசிவிட்டார் எனக்கூறி அவருக்கு தற்பொழுது சிறை தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

அதே நீதிமன்றம் தான் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது தவறில்லை என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் பார்க்கும் பொழுது பாஜக தங்களுக்கு ஏற்றார் போல் ஆட்சி சூழலை அமைத்துக் கொள்கிறது.

மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் விடுதலை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு தற்பொழுது சிறப்பு முகாம் என்ற பெயரில் மீண்டும் சிறைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து நாங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பொழுது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல ஆளும் கட்சியானது ஆட்சிக்கு வருவதற்கு முன் பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் வழங்குவது தான் தெரிவித்தது, தற்பொழுது தான் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என மாற்றி கூறுகின்றனர்.

எந்த வகையில் பெண்களை தகுதி அடிப்படையில் பிரிப்பீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மேலும் வரப்போகின்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் மேற்கொண்டு கூட்டணி வைக்கும் சூழல் வந்தால் அது குறித்து சிந்தித்து செயல்படுவோம் எனக் கூறினார்.

தற்பொழுது அவர் காங்கிரசுக்கு ஆதரவாளித்து பேசியுள்ளது அனைவருக்கும் திமுகவுடன் கூட்டணியில் இணைய போகிறார் என சொல்லாமல் சொல்வது போல் உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது சீீீீமான் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.