நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!

0
77

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் என்று இரண்டாவது தினமாக மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், ரஜினியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கின்றேன், சினிமா வேண்டுமானால் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கிண்டலடித்து இருக்கின்றார் கமலஹாசன்.

அதோடு தனக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து அமைச்சர்கள் தூக்கம் வராமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த கமல்ஹாசன், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் கமல்ஹாசன். நகரம் பெருநகரமாக மாறுவதற்கு கார்ப்பரேட் நிறுவனம் தேவை, குறு சிறு தொழில் கார்ப்பரேட் சமமாக இருக்கவேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலுமாக இருக்கக்கூடாது என்பது விதி.

லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் லஞ்சம் இல்லாத அரசாங்கமாக இருக்க வேண்டும் அடுத்தவர் நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் நான் நாத்திகன் அல்ல பகுத்தறிவுவாதி என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் கமலஹாசன்.