டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! 

0
86
Alliance with DTV. Baka plan to sideline OPS completely!
Alliance with DTV. Baka plan to sideline OPS completely!

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்!

அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பானது இம்மாதம் வர உள்ளது.

வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமைந்தாலும் சரி சாதக மற்ற முறையில் அமைந்தாலும் சரி இரு வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக இபிஎஸ் தரப்பு சுற்றுவட்டாரங்கள் கூறுகின்றனர். அந்தவகையில் தீர்ப்பானது ஓபிஎஸ் யிற்கு ஆதரவாக வந்துவிட்டால் அதனை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதாக கூறுகின்றனர். அதுவே எடப்பாடி பக்கம் தீர்ப்பு வருமாயின் ஒருபொழுதும் ஓபிஎஸ் வுடன் இணைய மாட்டேன் என்பதில் தீர்மானமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும் நடைபெறப்போகும் மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து திமுகவை எதிர்க்க போவதாக எடப்பாடி கூறி வருகிறார். இந்த மெகா கூட்டணி என்பது, தினகரனுடன் இணைய போவது தான், என அரசல் புரசலாக அரசியல் சுற்றுவட்டாரங்களில் பேசி வருகின்றனர். இந்த சூழலில் மேல் இடத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஆனால் எடப்பாடி ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளதாக கூறுகின்றனர்.அந்த வகையில் பாஜக அண்ணாமலை எடப்பாடியை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.அதில், தற்பொழுது வரப்போகும் தேர்தலில் முக்கிய தலைவர்கள் இணைய வேண்டும் என்று பல அழைப்புகள் மேலிடத்திற்கு வருவதாக தெரிவித்தார். அதற்கான நேரம் வரும் என்றும் கூறினார்.

மேலும் எடப்பாடி உடன் ஒத்து போகாத தலைவர்களை தன் பக்கம் இழுத்து கட்சியின் சின்னத்தை மூடக்கி பாஜக வழி நடத்த  போவதாக தகவல்களும் வெளிவருகிறது. தற்பொழுதே அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி மோதலை  தன் பலமாக உபயோகித்து திமுகவின் எதிர்க்கட்சியாக பாஜக தலை தூக்கி வருகிறது. இச்சமயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பக்கம் வந்து விட்டால் ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்த நாள் வரும்பொழுது மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

அதற்கான செயல்பாடுகளும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.எடப்பாடி திட்டம் போட்ட செயல்பாடுகள் அனைத்தும் சரியான முறையில் நடந்து வந்தால், திமுகவை ஒரு தலைமை கட்சியாக இருந்து எதிர்ப்பதில் முழுமையாக கவனம் செலுத்தப்படும் என்று கூறுகின்றனர்.