சசிகலாவின் தமிழக வருகை! ட்விஸ்ட் அடித்த சசிகலா!

0
68

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சென்ற 4 வருடகாலமாக சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தற்போது தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்து துயரங்களை தாங்கி சோதனை பலவற்றை கடந்து வந்திருக்கும் தியாகத் தலைவி சின்னம்மாவின் வருகை திருவிழா போல இருக்க வேண்டும். ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை வரவேற்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீயசக்திகளை வளரவிடாமல் தடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னரே சசிகலா அவர்கள் வரும் 7ஆம் தேதி தமிழகத்திற்கு வர இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அவருக்கு தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரும் வரையில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதேபோல டிடிவி தினகரன் தரப்பில் வரவேற்பு அளிக்கப்படும் காரணத்தால் எந்த வகையிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும், பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவை வரவேற்பதற்காக ஹெலிகாப்டரில் பூக்கள் தூவ அனுமதி வேண்டும் என்று முன்னாள் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவர் அனுமதி கேட்டிருந்தார் அதோடு அவரை வரவேற்பதற்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் தற்சமயம் சசிகலா பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எட்டாம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வர இருக்கிறார் சசிகலா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சசிகலா 7ஆம் தேதி தமிழகம் வந்து விடுவார் என்று எதிர்பார்து அவருடைய ஆதரவாளர்களும், அவர் கட்சியின் தொண்டர்களும் திடீரென்று அவரின் வருகை தேதி மாறியிருப்பதால் அதிருப்த்தியில் இருக்கிறார்கள்.