விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

0
110
All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..
All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் குப்பம் மெயின் ரோட்டில் சுதீஷ் அவரது தந்தையும் நின்று கொண்டிருந்தார்கள்.சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த சதீஸ் மீது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கில் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் சதீஸ் தூக்கி விசப்பட்டார்.இந்த விபத்தில் சதீஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.ரோட்டில் ரத்தம் சித்திய படி கிடந்தார்.அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரது உடல்  உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்யப் போவதாக அவரது பெற்றோர்கள் முன் வந்தனர்.பெற்றோர் கூறியதை தொடர்ந்து சுதீஷின் இதயம்,கிட்னி,கல்லீரல்,கண்கள்,என அவரது உடலில் உள்ள எல்லா பாகங்களும் தானமாக பெறப்பட்டது.பிறகு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுதீஷின் இந்த பெற்றோர்களின் திடீர்  முடிவு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் நன்றி தெரிவித்து வருகின்றார்கள்.என்னதான் இதில் சந்தோசம் என்றாலும் சிறுவனின் இழப்பு பெரும் வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.

author avatar
Parthipan K