தமிழகத்தில் விதிமுறைகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் – தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

0
54

தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் வருகின்ற அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் துவங்க இருப்பதாகவும் அந்த அனைத்து பள்ளிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசிடமிருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இரண்டு குழுவினராக பிரிக்கப்படுவராம்.

அதில் முதல் குழு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இரண்டாவது குழு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் பள்ளிக்கு வரவேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் முதல் குழு ஆசிரியர்கள் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் இரண்டாவது குழு ஆசிரியர்கள் புதன், வியாழன் ஆகிய நாட்களிலும் மீண்டும் முதல் குழுவினர் வெள்ளி, சனி நாட்களிலும் வரவேண்டும். இவ்வாறு ஒரு அட்டவணை தயார்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் என பல புது நடவடிக்கைகளை பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவு இல்லாமல் வேறு முறையான வருகைப் பதிவை பின்பற்ற வேண்டும். நுழைவாயிலில் இருந்து பள்ளிகளின்  அனைத்து இடங்களிலும் சோப்பு, தண்ணீர் மற்றும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற பல விதிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K