Connect with us

Breaking News

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

Published

on

அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் வழியாக தான் செல்ல வேண்டும்- போக்குவரத்து கழகம் உத்தரவு

அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது

Advertisement

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேட்டுக்கு தாம்பரம், கிண்டி வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் – மதுரவாயல் வழியாகவும் செல்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் நேர மிச்சம் என்றாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, அசோக்பில்லர், வடபழனி பகுதிகளில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

தாம்பரம் ரூட் என்றால் நேரடியாகவே அந்தந்த பகுதிகளில் இறங்கிக்கொள்ளலாம். இதனையடுத்து தற்போது போக்குவரத்துத்துறை, சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரலாம் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisement