தமிழக அரசின் முக்கிய திட்டத்திற்கு வேட்டு வைத்த பாஜக நிர்வாகி! கடுப்பில் முதல்வர்!

0
60

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

அவர் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்திருந்தார். அதனை தற்சமயம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

குறிப்பாக பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் கேஸ் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேர்தலின் போது திமுக கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை மட்டும் தமிழக அரசு உடனடியாக தொடங்கி வைத்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 58 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டனர், இந்தத் திட்டத்தை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்த்து வந்தார் கோவில்களில் தலையிடுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர் எச்சரிக்கை செய்தார். அதோடு திமுக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இப்படியான சூழ்நிலையில், இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இது இந்து மத உரிமைகளை மீறும் வகையிலான செயல், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரையில் தமிழக அரசு புதிய அர்ச்சகர்களை நியமனம் செய்யவும் ஏற்கனவே பணியில் இருக்கக்கூடிய அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்யவும் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து இருப்பதை இதனுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சுப்ரமணியசுவாமி, ரிட் மனு குறித்த விசாரணை தேதி என்ன என்பதை விரைவில் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டிருக்கிறார்.