Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்!

0
114

Alert:உருவாகிறது SITRANG புயல்! தீபாவளி கொண்டாட முடியுமா? அச்சத்தில் மக்கள்!

மதிய மேற்கு வங்கக் கடலில் சிட்ராங் (SITRANG) புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,பின்பு புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகம்,கேரளா,புதுச்சேரி, ஆந்திரா,மகாராஷ்டிரா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை உள்ளது.

அதன்படி தமிழகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில்,உருவாகும் இந்த புயல் தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென்று மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியுள்ளது.மேலும் அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் உருவாகும் இந்த புயலுக்கு “சிட்ராங்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

author avatar
Pavithra