பழம்பெரும் பின்னணி பாடகரும் நடிகருமான ஏ.எல்.ராகவன் காலமானார்!

0
68
AL Raghavan passed away by Covid-19 Infection
AL Raghavan passed away by Covid-19 Infection

பழம்பெரும் பின்னணி பாடகரும் நடிகருமான ஏ.எல்.ராகவன் காலமானார்!

சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா திரைத்துறையினரையும் தாக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பழம்பெரும் பாடகரும் நடிகருமான திரு ஏ.ல்.ராகவன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (19/06/2020) முற்பகலில் அவர் உயிர் பிரிந்தது.

ஏ. எல். இராகவன் ‘எங்கிருந்தாலும் வாழ்க”, “சீட்டுக்கட்டு ராஜா”, ‘என்ன வேகம் நில்லு பாமா”, ‘அங்கமுத்து தங்கமுத்து” உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ராகவன்
அவர் 1950 களில் இருந்து 1970 கள் வரை பல தமிழ் திரைப்படங்களில் பல்வேறு புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

அதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர். குறிப்பாக முன்னணி நடிகர்களான ஜெமினி ணேசன் மற்றும் நாகேஷ் நடித்த திரைப்படங்களில் அவரது பாடல்கள் புகழ்பெற்றவை.

மேலும் பிரபல நடிகை ஏ.எம்.ராஜா அவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.ராகவன் அவர்கள் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பழம்பெரும் நடிகர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K