ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை எல்லையில் களமிறக்கிய இந்தியா

0
64

இந்திய- சீன எல்லையான லடாக் பகுதியில் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா களமிறக்கியுள்ளது.எல்லையில் உள்ள அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா சீனா இடையே பேச்சு வார்த்தை நடைப்பெற்று வரும் நிலையில் சீனாவின் அத்து மீரல்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தொடர்ந்து இராணுவ படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

சீனாவிற்கு எதிராக ஏற்கனவே சுகோய் ஏவுகணைகள் மற்றும் குண்டு வீச்சு விமானங்கள் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதல் சக்தியை அதிகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு உள்நாட்டிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆகாஷ் ஏவுகணை எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கும் திறனுடையது.இருப்பினும் எல்லையில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா தொடர்ந்து எல்லையில் இராணுவ படைகளை குவித்து வண்ணமே உள்ளது.

author avatar
Parthipan K