ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
354
AK 62 director change! Official announcement coming soon!
AK 62 director change! Official announcement coming soon!

ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றம்! விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில்,நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 1 1 ஆம் தேதி விஜயின் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படத்தை தொடரந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அவருடைய 62 படம் நடிக்கிறார் என தகவல் வெளியானது.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதற்கான கதையை தயார் செய்யவில்லை அதனால் அஜித் 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். அவர் தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் தற்போது அஜித் 62  படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகத நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித் மகிழ் திருமேனி இணையும் அஜித் 62  படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K