அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!

0
115
Ajith's World Tour!! Confirmed manager!!
Ajith's World Tour!! Confirmed manager!!

அஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!

அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி இருக்கிறார். சமீபத்தில் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். அங்கிருந்த அவரது ரசிகர்களும் அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது.

ஏற்கனவே அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி அவரது பிறந்த நாள் அன்று அந்த திரைப்படத்தின் “விடாமுயற்சி” என்ற டைட்டிலை வெளியிட்டனர்.

அஜித், வருகிற நவம்பர் மாதத்தில் மீண்டும் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதனால் விடாமுயற்சி படத்தின் படபிடிப்பை அதற்குள் முடிக்க வேண்டும் என  படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தற்போது அஜித் சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கும் வரைபடத்தை அவரின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தை நெட்ப்ளிக்ஸ் வெளியுடுவதாக ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

author avatar
CineDesk