விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்!

0
80

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்!

எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதமே வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரசிகர்கள் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அஜித் படத்தை திரையரங்குகளில் காண மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வலிமை படம் வெளியாகும் தேதி மேலும், தள்ளி போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்த்தியதை தொடர்ந்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த பிறகு, கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. இந்த வலிமை திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக அடித்திருந்தார்.

தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் வெளியான இந்த ‘வலிமை’ திரைப்படம் இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘வலிமை’ திரைப்படம் ஓ.டி.டி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வலிமை திரைப்படத்தை விரைவில் வெளியிட உள்ளதாக அந்த தளத்தின் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

author avatar
Parthipan K