துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்!

0
106

துணிவு படத்தில் பக்கா மாஸ் ப்ரோமோஷன் பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்!

அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்காக ஒரு ப்ரமோஷன் பாடல் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அவரின் சம்பள பாக்கி என்று சொல்லப்படுகிறது.

இப்போது டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு திரைப்படம் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது ரசிகர்கள் அறிந்ததே. அதனால் படத்தின் ப்ரமோஷனுக்காக பக்காவான மாஸ் பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாம்.

விரைவில் இந்த பாடல் சென்னையில் ஷூட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் இந்த பாடலை பிரபல நடன இயக்குனரான கல்யாண் இயக்கித் தர உள்ளாராம். துணிவு படத்தின் மூலமாக முதல் முறையாக ஜிப்ரான் அஜித் படத்துக்கு இசையமைப்பாளர் ஆகியுள்ளார். ஏற்கனவே வலிமை படத்தில் பின்னணி இசை மட்டும் ஜிப்ரான் இசையமைத்துக் கொடுத்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் துணிவு படத்துக்காக ப்ரமோஷன் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் அஜித்தின் மேனேஜரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா  “ஒரு நல்ல திரைப்படம் அதனளவில் தானே ப்ரமோஷன் செய்துகொள்ளும் –அஜித்” என்று பகிர்ந்து அந்த தகவல்கள் பொய் என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார்.