2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

0
79

2 வருடம்… 50க்கும் மேற்பட்ட நாடுகள்… உலக சுற்றுலாவுக்கு திட்டமிடும் அஜித்! எப்போ தெரியுமா?

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று வாழ்ந்து வருகிறார்.

இப்போது அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது. அங்கு ஒரு ஆக்‌ஷன் சீக்வென்ஸை இயக்குனர் ஹெச் வினோத் படமாக்கி முடித்துள்ள நிலையில்  துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அஜித், லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்க போவதில்லையாம். ஏனென்றால் அஜித் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

அதுவும் இரு சக்கரவாகனத்தில் தன்னுடைய குழுவினரோடு. சமீபகாலமாகவே அஜித் அதிகளவில் பயணம் செய்வதில் ஈடுபாடு காட்டி வருகிறார். சமீபத்தில் துணிவு படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் கூட அவர் வட இந்தியா முழுவதும் அதுபோல பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

அதுபோலவே அஜித்தைப் பற்றிய மற்றொரு தகவல் சமீபகாலமாக ஊடகங்களில் பரவி வருகிறது. அஜித் விரைவிலேயே இந்தியாவை விட்டு வெளியேறி ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இப்போது அஜித் ஐரோப்பாவுக்குப் பயணம் சென்று வந்த இப்போது இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தங்கிவிட முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.