இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை!

0
76

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி… வர்ணனை செய்யப் போகும் தமிழ் நடிகை!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது.

பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கான தமிழ் வர்ணனையில் பிரபல தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வர்ணனை செய்ய உள்ளார். இதுபற்றி அவரே வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் பிரபல நடிகரான ஆர் ஜே பாலாஜியோடு இணைந்து பல பிரபலங்களும் வர்ணனை செய்து வருகின்றனர்.

கடந்த 23 ஆம் தேதி நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு வர்ணனையாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை நேருக்கு நேர் 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய 13 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. உலகக்கோப்பையில் நடந்த 5 போட்டிகளில் இந்தியா 4 முறையும் தென் ஆப்பிரிக்கா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.