3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

0
67

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை அடுத்த கட்டமாக சில மாநிலங்களில் நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஏரடெல் நிறுவனம் கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே வழங்கி வந்தது.

இந்நிலையில் தற்போது கொல்கத்தாவை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா, கொல்கத்தா, கோவா, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது 3 ஜி சேவையை நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் 3ஜி சேவை மட்டுமே வேலை செய்யும் மொபைல்களில் இனி 2ஜி சேவையை மட்டுமே பெறமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

மேலும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா முழுவதும் 3 ஜி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் 2ஜி மற்றும் 4 ஜி சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஜியோவின் வருகைக்குப் பின் தொலைதொடர்பு துறையில் பலமாக அடிவாங்கிய ஏர்டெல் அதிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை 23 ரூபாயில் இருந்து 45 ருபாயாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K