கொரோனாவால் நடந்த ஒரே ஒரு நன்மை! 2024 இலக்கை 100 நாட்களில் எட்டியது இந்தியா! அப்படி என்ன நன்மை தெரியுமா

0
126

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது காற்றின் தரம் முன்னேறி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல பெரிய நகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.குறிப்பாக இந்தியாவின் டெல்லி,மும்பை,சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு அதிகரித்து கொண்டே இருந்தது.இதற்கு காரணம் தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை மற்றும் வாகனங்களிலிருந்து வரும் புகை ஆகியவை காரணமாகச் சொல்லப்பட்டன.

எனவே இந்த காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் தேசிய தூய்மையான காற்றை சுவாசிக்கும் இலக்கை 2024 ஆம் ஆண்டு அடைய நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்டுள்ள நிலையில் காற்றின் தரமானது வேகமாக உயர்ந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த காற்றின் தரம் அதிகரிப்பதற்கு போக்குவரத்து தடை, தொழிற்சாலைகள் தடை மற்றும் செங்கல் சூலைகள் இயங்காதது ஆகியவை இதற்கு காரணமாக விளங்குகின்றன.மேலும் இந்த காற்றின் தரம் உயர்ந்து வரும் செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K