இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

0
64
Air service canceled these days! Increased corona damage again!
Air service canceled these days! Increased corona damage again!

இந்த தினங்களில் விமான சேவை ரத்து! மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களை கடந்து தற்போது வரை முடிவில்லாமல் பரவி வருகிறது.இது முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.அதனையடுத்து நாளடைவில் உலக நாடுகள் மத்தியில் மக்கள் அனைவருக்கும் பரவ தொடங்கியது.முதலில் அந்த தொற்றை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென்று தெரியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வந்தது.

நாளடைவில் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது.மக்கள் அதனை பின்பற்றுமாறு அனைத்து அரசாங்கமமும் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தது.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் ஊரடங்கையும் அமல்படுத்தி வந்தனர்.இதனால் அனைத்து நாடுகளும் பெருமளவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர்.தற்போது வரை சில நாடுகளால் அதிலிருந்து மீள முடியவில்லை.நாளடைவில் கொரோனா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.மக்கள் அனைவரும் அதனை செலுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த கொரோனா தொற்று அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியடைந்து அதிக அளவில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.முதலில் இந்த தொற்று ஆரம்பித்த காலத்தில் தான் முன்னேற்பாடுகள் இன்றி இருந்தனர்.ஆகையால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது அனைத்து அரசாங்கமும் தொற்றுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளுடன் உள்ளது.இவ்வாறு இருக்கையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஹாங்காங் பகுதியில் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.அதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அங்கு பாதிப்பு ஓர் நாளின் எண்ணிக்கை இரண்டாயிரமாக எட்டியுள்ளது.

அதனால் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.தற்போது தொற்று பாதிப்புக்கள் அதிகரிக்க தொடங்கியதால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.அவர்கள் எந்த ஒரு தொற்று பாதிப்புக்கள் இல்லை  என்று உறுதி செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.தற்போது ஹாங்காங் செல்ல பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது.அதனால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி நாளை மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஹாங்காங்கில் இருந்து வர இருந்த விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர்.மீண்டும் தோற்று பாதிப்பு குறைந்து சீரான பிறகே பழைய நிலைக்கு சேவை தொடங்கும் என கூறியுள்ளனர்.