நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?

0
57

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சென்ற மாதம் 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் நகரம் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.இந்த பரபரப்பான தேர்தல் களத்தில் திடீரென்று ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதாவது புதுக்கோட்டையில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரை சக வேட்பாளர் கடத்தியதாக புகார் எழுந்திருக்கிறது, அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டில் அதிமுக சார்பாக ராதிகாவும், திமுக சார்பாக கீதாவும், போட்டியிடயிருக்கிறார்கள்.

திமுகவின் வேட்பாளர் கீதா தரப்பினர் தன்னுடைய கணவரை கடத்தியிருக்கலாம் என்று அதிமுக வேட்பாளர் ராதிகா காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. ஆனாலும் அவரை யார் கடத்தினார்கள்? அவர் எங்கே சென்றார் என்பது இதுவரையில் தெரியவில்லை.

அதேபோல மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, அதாவது மதுரை வாடிப்பட்டி பேரூராட்சி 9வது வார்டு அதிமுக வேட்பாளர் இந்திராணி கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக வேட்பாளரை மிரட்டி கடத்தி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அந்த கட்சியினர் வாடிப்பட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல மாலை 3 மணி வரையில் வேட்பு மனுக்களை திரும்ப பெற கால அவகாசம் இருக்கின்ற சூழ்நிலையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டதாக இந்த புகார்கள் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.